×

குஜராத்தில் உலகளாவிய ஃபின்டெக் மையம்.. டிஜிட்டல் மையமாக்கல் நிதியில் 10 மில்லியன் டாலர் முதலீடு : கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

வாஷிங்டன் : கூகுள் நிறுவனம் குஜராத்தில் உலகளாவிய ஃபின்டெக் மையத்தைத் திறக்கும் என்று பிரதமரைச் சந்தித்த பிறகு சுந்தர் பிச்சை அறிவித்தார்.அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.இந்த நிலையில், இந்திய மற்றும் அமெரிக்க தொழில்நிறுவன சி.இ.ஓக்கள் கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் சத்திய நாதெல்லா, கூகுள் (ஆல்பபெட்) நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், நாசா நிர்வாகி பில் நெல்சன், ஓப்பன் ஏஐ சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன், ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக், ஃப்ளெக்ஸ் நிறுவன சி.இ.ஓ ரேவதி அத்வைதி, ஏ.எம்.டி நிறுவன சி.இ,ஓ லிசா சு, துல்கோ எல்எல்சி நிறுவனர் தாமஸ் டல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து பேசிய கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை,”அமெரிக்காவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை மேற்கொண்ட பிரதமர் மோடியை சந்தித்தது, மிகவும் பெருமையாக இருந்தது. இந்தியாவின் டிஜிட்டல் மையமாக்கல் நிதியில் 82 ஆயிரம் கோடி ரூபாயை கூகுள் நிறுவனம் விரைவில் முதலீடு செய்ய உள்ளது.குஜராத்தின் கிப்ட் சிட்டியில் கூகுளின் சர்வதெச பின்டெக் செயல்பாட்டு மையத்தை திறக்க உள்ளோம்,”என்றார். அதே போல், இந்தியாவில் மேலும் ரூ.1.22 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே சுமார் ரூ. 90 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ள நிலையில், மேலும் முதலீடு செய்கிறது அமேசான் நிறுவனம்.

The post குஜராத்தில் உலகளாவிய ஃபின்டெக் மையம்.. டிஜிட்டல் மையமாக்கல் நிதியில் 10 மில்லியன் டாலர் முதலீடு : கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Google ,CEO ,Sundar Pichai ,Washington ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்